×

முகநூல், டிக்டாக் மூலம் காதலித்து 4 பேரை ஏமாற்றி திருமணம் செய்து பெண் மோசடி

மயிலாடுதுறை, பிப்.17: முகநூல், டிக்-டாக் மூலம் 4 ஆண்களை பொய்யாக காதலித்து திருமணம் செய்து பணம் பறித்து ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட நபர் மயிலாடுதுறை டிஎஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். மயிலாடுதுறை தாலுகா மணக்குடியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் பாலகுரு. டிரைவர். இவருடன் மயிலாடுதுறை மூவலூரைச் சேர்ந்த மீரா என்ற பெண் முகநூலில் அறிமுகம் ஆகியுள்ளார். 6 மாதங்கள் தொடர்ந்த இந்த நட்பு காதலாகி கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் மீராவை திருமணம் செய்துள்ளார். சில வாரங்களில் அப்பெண்ணின் பெயர் மீரா இல்லை என்பதும், அவரது பெயர் ரஜபுநிஷா என்பதும் தெரியவந்தது. இருப்பினும் பாலகுரு அப்பெண்ணுடன் திருமண வாழ்க்கையை தொடர்ந்துள்ளார். பாலகுரு வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவுடன் அவரது வீட்டுக்கு வேறொரு ஆண் வந்து செல்வதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சந்தேகமடைந்து பெண்ணின் செல்போனை சோதனை செய்ததில் அப்பெண்ணுக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் உள்ளிட்ட 4 ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பாலகுரு அப்பெண்ணைக் கண்டித்ததால் தன் தாய் வீட்டுக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றவர் மீண்டும் வரவில்லை. விசாரித்துப் பார்த்ததில் அப்பெண் திண்டுக்கல்லை சேர்ந்தவருடன் சென்று குடும்பம் நடத்தி வருவது தெரியவந்துள்ளது. வீட்டை விட்டுச் செல்லும்போது வீட்டில் வைத்திருந்த 1 பவுன் செயின் மற்றும் ரூ.70 ஆயிரத்தையும் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பாலகுரு மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாதுரையிடம் புகார் மனு அளித்துள்ளார். அம்மனுவில் ஏமாற்றிச் சென்ற அப்பெண்ணைக் கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Tick Tock ,
× RELATED இறந்த முயலுடன் டிக்-டாக் 3 பேருக்கு அபராதம்: வனத்துறை அதிரடி